சமூக திறன்கள்

Social Skills

 

மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? மற்றவர்களுடன் உங்கள்  நேரத்தைச் செலவிடுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் எங்கிருந்தாலும் நண்பர்களை உருவாக்க முயற்சிக்கிறீர்களா? மற்றும் எல்லா உறவுகளையும் நட்பாக வைத்திருக்கிறீர்களா? இவை இன்றைய உலகில் நாம் கொண்டிருக்க வேண்டிய முக்கியமான சமூக திறன்கள்.

 

சமூக திறன்கள் என்றால் என்ன?

 

சமூக திறன்கள் என்பது தனிப்பட்ட குணங்களாகும் , அவை மற்றவர்களுடன் பழகுவதற்கும் வேலை செய்வதற்கும் உங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. நல்ல தனிப்பட்ட திறன்களைக் கொண்டிருப்பது ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றவும், உங்கள் இலக்குகளை எளிதில் அடையவும் உதவுகிறது. சமூகத்தவர்களுடன் தொடர்புகொள்வதற்கும் நல்ல உறவுகளை வளர்ப்பதற்கும் அவை எங்களுக்கு உதவுகின்றன.

 

சமூகத்தில்  திறமை வாய்ந்தவராக இருப்பது எப்படி?

 

வேறு எந்தத் திறமைகளையையும் போலவே மக்களுடன் தொடர்ச்சியான  மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை உருவாக்க விரும்பினால், சிறந்த செவிமடுத்தல் அவசியமாகும். மற்றவர்களின் மீது அனுதாபம் கொண்டிருப்பது அவசியமானதாகும், ஏனென்றால் சமூகத்திலுள்ளவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். மரியாதை என்பது மற்றவர்களுடன் நாம் வைத்திருக்கும் தொடர்புகளின் மூலம் உருவாக்கப்படுவதாகும். மேலும் நமது வித்தியாசமான சமூக திறன்களை வளர்க்க முயற்சிப்பதில் இது வேறுபட்டதல்ல.

உங்கள் சமூக திறன்களை வளர்க்க விரும்பினால், மற்றவர்களிடமிருந்து சில கருத்துகளைப் பெற தயக்கம் தேவையில்லை. நாம் செய்யும் செயல்களால் பிறருக்கு ஏற்படும் பாதிப்புகளை எம்மால் அறிந்துக்கொள்ள முடியாது. மற்றவர்களின் கருத்துகளை செவிமடுக்கவிட்டால் அவர்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படலாம்

மாறாக எங்களிடம் நல்ல விடயங்கள் இருக்கலாம், ஆனால் எங்களுக்குக் மற்றவர்களின் கருத்து கிடைக்கவில்லை என்றால் எங்களிடம்முள்ள சிக்கல்கள் ஒருபோதும் தெரியாது. ஆக்கபூர்வமான பின்னூட்டம் நம்மை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

நீங்கள் மேம்படுத்த வேண்டியது என்ன என்பதை நீங்கள் அறிந்தவுடன், நாங்கள் முயற்சி செய்யாவிட்டால் சமூகத்திறனை மேம்படுத்த முடியாது. தேவையானதைக் கற்றுக்கொள்வது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. நாம் கற்றுக்கொண்ட விடயங்களை உறுதிசெய்ய நேரத்தை ஒதுக்க வேண்டும். இதை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை இணையதளங்களில் ஊடாக பெற்றுக் கொள்ளாம். இதன் ஊடாக நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியதை சில நிமிடங்களில் கண்டறிய முடியும். அத்துடன் இந்தத் திறன்களை அடையவும் மற்றும் உங்களுக்கான இலக்குகளை அமைத்துக் கொள்வும் உதவுகிறது.

 

சமூக திறன்களின் கூறுகள்

 

  • எந்தவொரு சமூக சூழ்நிலையிலும் இது சிறந்த உறவுகளை உருவாக்குகிறது.
  • ஓவ்வொருவருக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துகிறது.
  • இது நமது சமூக தொடர்புகளிலிருந்து மகிழ்ச்சியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
  • இது தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கக்கூடும்.
  • சிறந்த தொடர்புகள் நீங்கள் மற்றவர்களுடன் விரைவாகவும் திறமையாகவும் பணியாற்ற முடியும் என்பதையும் குறிக்கிறது.

 

தகவல்களை பகிர்தல் ஒத்துழைத்தல், மற்றவர்களின் கருத்துக்கு செவிசாய்ப்பது முக்கமானதாகும் அணியின் ஒரு பகக்கசார்பாக இருப்பதும் , மரியாதைக்குரியதாக இருப்பதிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

 

நாம் மற்றவர்களுடன் பழகும் திறன் சமூக திறன்களிலிருந்து வருகிறது. எங்கள் சமூக திறன்களை விருத்திசெய்ய நாங்கள் மக்களுடன் தொடர்புகொள்ள வேண்டும். ஒரு சமூக அல்லது தொழில்முறை அமைப்பில் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதும் கருணை காட்டுவதும் நமது கடமையாகும். ஒரு சிறந்த ஏதிர்காலத்துக்கு இன்றிலுருந்தே  சமூக திறன்களை வளர்க்கத் தொடங்குங்கள்.

You may also like

Leave a comment