தகவல் வியாபாரம் – பகுதி IV
Dark Web எனும் நிழலுலகம்
நாம் சாதாரணமாக இணையத்தில் கண்டிராத இணையத்தின் கருப்பு பக்கம இதுவாகும். இணையம் மூலம் இடம்பெறும் பற்பல சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் காரண கருத்தாவாக இதனைக் குறிப்பிடலாம். ஏனையோரால் தொடர முடியாத இந்த இணையத்தளங்கள் பாதுகாப்பு தரப்பினரால் கூட தேடிப்பிடிக்க கடினமானவொன்றாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருதி நான் இதனை பற்றி மேலும் விளக்குவதை தவிர்க்கிறேன். இதற்குள் வணிகம் செய்வது முற்றிலும் தவறான செயலாகும்.
இணையத்தை அதாவது Web ஐ நாம் மூன்றாக பிரிக்கலாம்.
- Surface web – நாம் நாளாந்தம் உபயோகிக்கும் இணையம்.
- Deep web – முக்கியமான தகவல்களை மட்டும் கொண்டுள்ள தரவுக் களஞ்சியம்
- Dark web – இனங்காண முடியாத இணையத் தளங்களின் தொகுதி
நாம் எம்மை பாதுகாத்துக்கொள்ளுவது எப்படி?
- முதலாவதும் முக்கியமானதுமான விடயம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை இணையத்தளங்களில் குறிப்பிடுவதை இயன்றளவில் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- உங்கள் Username உளவுப் பெயர் Password இரகசியச் சொல் என்பவற்றை Browser இணையம் தாங்கு மென்பொருளில் சேமிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- பணம் தாங்கிய அட்டைகள் குறித்த விபரங்களை பொருட்கள் கொள்வனவு செய்யும் நோக்கத்தில் ஏதேனும் வலைத்தளம் ஒன்றில் குறிப்பிட்ட வேண்டியிருந்தால், குறிப்பிட்ட இணையத்தளம் பாதுகாப்பான ஒன்றாயென ஆராய்ந்து பாருங்கள்.
- எந்த சந்தர்ப்பத்தில் உங்களது தனிப்பட்ட விபரங்களை நம்பகம் இல்லாதவர்களிடம் கொடுக்காதீர்கள்.
- இணைத்தளத்திலுள்ள உங்களின் மின்னஞ்சல், சமூகத்தள, நிதி சார்ந்த கணக்குகளில் இரண்டு தள பாதுகாப்பு படலங்களை இடுங்கள்.
- கையடக்கத் தொலைபேசியில் நீங்கள் Applications மென்பொருள்களுக்கு வழங்கியுள்ள அனுமதிகள் பற்றி அவதானத்துடன்.
- அனாவசியமானதும் அங்கீகரிக்கப்படாத தயாரிப்பாளர்களால் வழங்கப்படும் மென்பொருட்களை Install உள்ளிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
வாசகர்களே இக்கட்டுரை குறிப்பிட்ட விடயங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன். இன்னுமொரு புதிய விடயத்துடன் மீண்டும் சந்திப்போம்.
முற்றும்.