தகவல் வியாபாரம் – பகுதி I
இரும்புத்திரை திரைப்படத்தை நீங்கள் கண்டு களித்திருப்பீர்கள். அதில் நடிகர் அர்ஜுன் சொல்லும் வார்த்தை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
‘Information is Wealth’ இதன் அர்த்தம் தகவல் என்பது ஒரு சொத்து.
டிஜிட்டல் உலகம் என்கிறோம். உலகமயமாக்கம் என்கிறோம். ஒரு குடையின் கீழ் உலகம் என்கிறோம். அந்த சுதந்திரத்துக்கு பின்னால் ஒரு மர்மம் உள்ளதை நாம் எத்தனை பேர் அறிவோம்?
முழு உலகமும் உங்கள் கையில் என்று பல வசதிகளைக் கொண்டு எந்த நேரமும் உங்கள் கைகளில் உருளும் ஸ்மார்ட் தொலைபேசியை நீங்கள் எவ்வாறு பார்க்குறீர்கள்? உங்களை பற்றி பல உண்மைகளை அது அறிந்து வைத்துள்ளது. காரணம், அது நித்தம் உங்கள் கையில் நீங்கள் செய்பவை எல்லாவற்றையும் அறிந்து வைத்துள்ளது.
புரியவில்லையா?
Applications அதாவது மென்பொருட்கள். நீங்கள் நாளாந்தம் உபயோகிக்கும் உபயோகிப்பவைகளை சற்று பாருங்கள். நீங்கள் பணம் கொடுத்து வாங்கியவை எத்தனை? அனேகமானவை இலவசமாக வழங்கியவைத் தானே.
கூகிள் வியாபாரம்
கூகிள் போன்ற தேடல் கருவிகள்; ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள்; வாட்ஸ்-அப் போன்ற தொடர்பாடல் கருவிகள்; அதையும் தாண்டி அஞ்சல் தேவைகளுக்காக நீங்கள் நாளாந்தம் உபயோகிக்கும் யாகு, அவுட்-லுக் போன்றவை உங்களுக்கு தாளாரமாக வசதிகளை வழங்கும் தொண்டர் நிறுவனங்கள் என்று நினைக்கின்றீர்களா?
உலகில் முன்தங்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாக உருபெறும் அளவுக்கு அவை எவ்வாறு வருமானம் ஈட்டின? சற்று சிந்தித்து பாருங்கள்.
பாவணையாளர்கள் நாமென்றால் எம்மிடமிருந்து தானே அவர்களுக்கு வருமானம் ஈட்ட வேண்டும்… அது தானே நியாயம் தர்மம் எல்லாம்? பில்லியன் டொலர்களில் வருமானம் ஈட்டும் அளவுக்கு நாம் எதை தான் அவர்களுக்கு கொடுத்துள்ளோம்?
அது தான் தகவல். அவர்கள் வியாபாரம் செய்வது எமது தகவல்களைக் கொண்டே.
கடந்த ஒரு மாதத்தை கொஞ்சம் மீட்டிப் பாருங்கள். கூகிளில் எவற்றையெல்லாம் தேடிப்பார்த்தீர்கள். தேடிய விடயங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் உங்களின் தேவைகள் ஒழிந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் உங்கள் எண்ணங்களை வௌிக்காட்டும். உங்கள் தேடல்களை தொடர்ச்சியாக ஆராய்வாராயின், அவைகளால் உங்கள் எண்ணங்களைப் பற்றி அறிந்திக்கொள்ள முடியுமல்லவா?
வியாபாரம் என்பது தேவைகளை பூர்த்திச் செய்தல் என்பார்கள்.
நாம் ஒரு வணிகரை அணுகுவது எமது தேவையை பூர்த்திச் செய்துக்கொள்ள தானே. உங்கள் தேவைகள் என்னவென அறிந்து அவற்றிற்கு பொருத்தமான உற்பத்திகள் உங்களை அணுக வைப்பதே அவர்களது வியாபாரம்.
Hacking அறிமுகம்
Hack என்ற வார்த்தையை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அதாவது உங்கள் கணினிக்கோ உங்கள் தகவல் கோப்புகளுக்கு அங்கீகரிக்கப்படாத அத்துமீறல். அதன் பாதிப்புகளும் பலவாறு இருக்கும். குறிப்பாக சொன்னால் நீங்கள் உங்கள் கையில் வைத்திருக்கும் கைப்பேசி உங்களை தொடரும் கமராவாகவே மாறியுள்ளது.
Computer Programming அதாவது கணினியில் கருவிகள் எவ்வாறு செயற்படுகின்றன எனவறிந்து, மென்பொருட்கள் தயாரிக்கும் நுட்பம். இதில் நிபுணத்துவம் பெற்றவர்களை Computer Programmers என்போம். இதில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு சாராரையே நாம் Hackers என கூறுகிறோம். இவர்களை இருவகையாகப் பிரிக்கலாம்.
1, Whitehat Hackers
2, Blackhat Hackers
தொடரும்…