அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47

Tamil Letters

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

 

  • அ —–> எட்டு
  • ஆ —–> பசு
  • ஈ —–> கொடு, பறக்கும் பூச்சி
  • உ —–> சிவன்
  • ஊ —–> தசை, இறைச்சி
  • ஏ —–> அம்பு
  • ஐ —–> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
  • ஓ —–> வினா, மதகு – நீர் தாங்கும் பலகை
  • கா —–> சோலை, காத்தல்
  • கூ —–> பூமி, கூவுதல்
  • கை —–> கரம், உறுப்பு
  • கோ —–> அரசன், தலைவன், இறைவன்
  • சா —–> இறப்பு, மரணம், பேய், சாதல்
  • சீ —–> இகழ்ச்சி, திருமகள்
  • சே —–> எருது, அழிஞ்சில் மரம்
  • சோ —–> மதில்
  • தா —–> கொடு, கேட்பது
  • தீ —–> நெருப்பு
  • து —–> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
  • தூ —–> வெண்மை, தூய்மை
  • தே —–> நாயகன், தெய்வம்
  • தை —–> மாதம்
  • நா —–> நாக்கு
  • நீ —–> நின்னை
  • நே —–> அன்பு, நேயம்
  • நை —–> வருந்து, நைதல்
  • நொ —–> நொண்டி, துன்பம்
  • நோ —–> நோவு, வருத்தம்
  • நௌ —–> மரக்கலம்
  • பா —–> பாட்டு, நிழல், அழகு
  • பூ —–> மலர்
  • பே —–> மேகம், நுரை, அழகு
  • பை —–> பாம்புப் படம், பசுமை, உறை
  • போ —–> செல்
  • மா —–> மாமரம், பெரிய, விலங்கு
  • மீ —–> ஆகாயம், மேலே, உயரம்
  • மு —–> மூப்பு
  • மூ —–> மூன்று
  • மே —–> மேன்மை, மேல்
  • மை —–> அஞ்சனம், கண்மை, இருள்
  • மோ —–> முகர்தல், மோதல்
  • யா —–> அகலம், மரம்
  • வா —–> அழைத்தல்
  • வீ —–> பறவை, பூ, அழகு
  • வை —–> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
  • வௌ —–> கௌவுதல், கொள்ளை அடித்தல்

அறிந்து மொழிந்து தமிழைக் காப்போம்.

You may also like

Leave a comment