பன்முகத்தன்மை
நீங்கள் வித்தியாசமான நபர்களுடன் பணியாற்றுவதற்கு ஆர்வமாக உள்ளீர்களா? மற்றவர்களை நன்கு அறிந்து கொள்ள முடியமேயானால் சிறப்பாக இருக்குமல்லவா? அதேபோல் நீங்கள் வித்தியாசமான நபர்களின் பன்முகத்தன்மையையும் மாறுபட்ட கருத்துக்களையும் மதிக்கிறீர்களா? அவ்வாறாயின், நீங்கள் ஏற்கனவே பன்முகத்தன்மையை மதிக்கும் ஒருவராக இருக்கிறீர்கள்.
பன்முகத்தன்மை என்றால் என்ன?
பன்முகத்தன்மை அவரவர் பிறந்து வளர்ந்த பின்னணி, அவர்களின் கருத்துகள், இனம், கலாச்சாரம் அல்லது பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகியதாக காணப்படுகிறது.. தனி நபர் பன்முகத்தன்மை தொடர்பாக அக்கறை செலுத்துவதும் மாறுபட்ட நபர்களுடன் பணியாற்றுவதும் நம் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, உலகத்தைப் பற்றிய பரந்தளவிலான புரிதலை பெற்றுக்கொள்வதற்கு அது காரணமாக இருக்கிறது. பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள இயலாமை மற்றும் அதை மதியாமை என்பன எந்தவொரு சமூக குழுவுக்கும் அல்லது சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்ககூடிய அசௌகரியத்தையும் அத்துடன் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும் வழிவகுக்கக்கூடிய காரணிகளாக உருவாகுவதற்கு காரணமாக இருக்கும். நீங்கள் பன்முகத்தன்மையை மதிக்கும் நபர் என்றால், ஒருவர் வசிக்கும் பிரதேசம் அல்லது பிற காரணிகளின் அடிப்படையில் நீங்கள் எவரையாவது வித்தியாசமான வகையில் நடத்தப் போவதில்லை. பன்முகத்தன்மையை மதிப்பதன் மூலம், நாம் மற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு சமமான வாய்ப்புகளையும் மற்றும் சட்டப் பாதுகாப்பையும் வழங்குவதற்கான அர்ப்பணிப்பு உங்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் எளிமையாகச் சொல்வதென்றால், நாம் ஒரு நபரை இனம், மதம் அல்லது பிறந்த பிரதேசம் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் வகைப்படுத்தப் போவதில்லை. அதன் அடிப்படையில் நீங்கள் அவர்களுடன் பணிபுரியும் முறைமையில் மாற்றங்கள் ஏதேனும் செய்யப்போவதில்லை.. சிறப்பான ஏதாவதொன்றை அவர்களுக்கு கொடுத்தல் அல்லது அவர்களுக்கு கிடைக்ககூடியதை அவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதற்கு அதை காரணமாக கொள்ளப் போவதில்லை. நாங்கள் அவர்களை ஓரங்கட்டவோ அல்லது அவர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதோ இடம்பெறாது. நாம் அவரவர்களின் பன்முகத்தன்மையை மதித்து அவர்களுடன் ஒன்றாக பணியாற்றுகிறோம். நாங்கள் அவர்களை எங்கள் குழுவின் ஒரு பகுதியினராக ஏற்றுக்கொள்வதுடன் பன்முகத்தன்மை ஒரு வலிமை என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
சவால்களை வெற்றிகொள்வதற்கு வேலைத்தள பன்முகத்தன்மை.
வேலைத்தளத்தில் பலவிதமான அரசியல் சூழல், பாலியல் நோக்கம், கருத்துகள், இனங்கள், பாலினங்கள், வயது, பொருளாதார பின்னணிகள் மற்றும் மதங்களை கொண்ட பணியிடத்தில் பன்முகத்தன்மையுடைய நபர்களை உள்வாங்கிக் கொள்ளல் அலுவலக சூழலை பன்முகத்தன்மையாக்குதல் முதல் படியாகும். அதேபோல் பன்முகத்தன்மையை மதித்தல், முடிவுகள், தீர்மானங்கள் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவர்களையும் உங்களுடன் இணைத்துக்கொண்டு செயற்படவேண்டும். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வது மூலம் அவர்களை மதிக்கவும் அன்புடன் வரவேற்கவும் நாம் தூண்டப்படுகிறோம். வித்தியாசமான நபர்களை எங்கள் குழுக்களுடன் இணைத்துக் கொள்வதன் மூலம், “பாகுபாடுடன் கவனித்தல்” என்பதற்கு அப்பால் பன்முகத்தன்மைக்கு நீங்கள் இடமளித்துள்ளீர்கள் என்பதை நீங்கள் நடைமுறையில் உலகிற்குக் காட்டுகிறீர்கள்.
உண்மையிலேயே மாறுபட்ட பணியிடங்களை கொண்டிருப்பது மற்றும் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய குழுக்களை உருவாக்குதல், உறுப்பினர்களிடையே சிறந்த உறவை உருவாக்குவதுடன் பணியிடங்களில் உற்பத்தித்திறனும் இலாபமும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு உறுப்பினரும் அங்கீகாரத்துக்கு உள்ளாக்கப்படும் போது மகிழ்ச்சியுடன் பணியாற்றும் குழு மூலம் உற்பத்தி திறன் அதிகரிப்பதுடன் இலாபகரமான அலுவலகத்தையும் உருவாக்கக்கூடியதாக இருக்கும். ஆகவே, ஒவ்வொரு உறுப்பினரையும் அங்கீகரிப்பது மற்றும் அவர்களின் குழுவின் பங்காளராக அங்கீகரிப்பதும் முக்கியம்.
பன்முகத்தன்மையின் கூறுகள்.
தானும் குழுவில் ஒருவர் என்ற உணர்வு தோன்றும் வகையில் அனைவருக்கும் குழுவில் ஒரு அங்கீகாரத்தை வழங்குங்கள்.
முதலில் ஒரு முன்மாதிரியான தலைவராக இருங்கள். நீங்கள் உங்களை விட அல்லது உங்கள் குழுவில் மற்றவர்களை விட மாறுபட்டவர்கள் மத்தியில் நீங்கள் சிறப்பாக நடந்துகொள்ளும் விதத்தை ஒரு முன்மாதிரியாக காட்டலாம்.
ஒருசில நபர்கள் அவர்களின் தோற்றம் அல்லது பின்னணியின் அடிப்படையில் சிறப்பு நன்மைகள் அல்லது வாய்ப்புகளைப் பெறும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். அதற்கு இடமளிக்க வேண்டாம்.
குழுவில் உள்ள வெவ்வேறு நபர்களின் வித்தியாசமான கருத்துகளைக் கேளுங்கள். அவர்கள் அனைவரும் குழுப் பணிகளில் பங்காளிகளாக ஆக்குங்கள். அது பிரச்சினைகளை வெவ்வேறு கோணங்களில் காண உங்களுக்கு உதவும்.
தேவையானால் பன்முகத்தன்மைக்கு சதவீதங்களை வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, உங்கள் அலுவலகத்திற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் எத்தனை சதவீதம் இணைத்துகொள்ளப்படுகிறார்கள் என. அது சேவையின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு இருப்பதாக இருக்ககூடாது. தெரிவுசெய்தல் முடிவுசெய்தல் போன்றவற்றில் வித்தியாசத்தை காரணமாக கொள்வது பொருத்தமற்றது.
முடிவெடுக்கும் போது நீங்கள் ஒருமுறை மாத்திரம் பன்முகத்தன்மையுடையவர்களை இணைத்துக்கொள்வது போதுமானதல்ல. அது அன்றாட செயற்பாட்டில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். இயலுமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களை இணைத்துக்கொள்ளுங்கள். திட்டமிட்டு அவர்ளை தவிர்த்து முடிவுகளை எடுக்கப்பட்டுள்ளது என்ற ஒரு உணர்வை அவர்களிடம் தோன்ற இடமளிக்க வேண்டாம். அது நன்மையளிக்காது.
ஒரு குழுவின் அங்கமாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்ற தோற்றம் உருவாக்கப்படுவதுடன் ஒரு சில காரணிகளின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குவதற்கு அல்லது “பாகுபாடு காட்டப்படலாம் என்ற பயம்” இல்லாத சூழலை எப்போதும் உருவாக்குங்கள்.
பன்முகத்தன்மை என்பது அனைவருக்கும் பொருந்தக்கூடிய விதத்தில் ஏற்படுத்தும் முறைமையல்ல. ஒவ்வொருவரும் தனக்கு உரிய வழியில் குழுவுடன் இணைந்து அதில் ஒரு பங்காளியாக இருப்பதற்கான இயலுமையை தோற்றுவிக்கிறது.