தகவல் வியாபாரம் – பகுதி III

Facebook அம்பலம்

 

Facebook

 

Facebook அதாவது முகப்புத்தகம். உங்களைப் பொருத்தவரையில் உலகத்தை இணைக்க உருவாக்கம் தொண்டர் நிறுவனம். அதில் எல்லாமே இலவசம் எவ்வளவானாலும் இலவசம். அது அப்படி இல்லை. கசக்கும் உண்மையொன்றை உங்களுக்கு கூறவா?  ‘கூகிள்’ உங்கள் தேடல்களை அறியவல்லது என்றால், ‘முகப்புத்தகம்’ உங்கள் வாழ்க்கையையே அறிவல்லது. கடந்த இரு வாரங்களில் உங்களின் முகப்புத்தக நடவடிக்கையை சற்று மீட்டுப்பாருங்கள்.

 

– நீங்கள் விரும்பிய பதிவுகள் என்ன?

– நீங்கள் பதிர்ந்த பதிவுகள் என்ன?

– நீங்கள் எதிர்பார்த்த நபர்கள் யார்?

– நீங்கள் தேடிய நபர்கள் யார்?

– உங்களுக்கு காட்டிய பரிந்துரைகள் என்ன?

– நீங்கள் கருத்து தெரிவித்த பதிவுகள் என்ன?

 

அதேவேளை நீங்கள் முகப்புத்தகத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பற்றியும் சிந்தித்து பாருங்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் ஒருவருக்கு நீங்கள் யார் என்று அடி முதல் முடிவரை கூறலாம் அல்லவா? அதை வியாபார ரீதியில் உபயோகிக்கும் முகப்புத்தகத்துக்கு உண்டு.

 

சற்று சிந்தித்து பாருங்கள். பதிவுகளுக்கு இடையில் நீங்கள் சில விளம்பரங்களைக் காணலாம். அவைகள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான அல்லாவிட்டால் நீங்கள் தேடிக்கொண்டு இருக்கும் ஏதேனும் ஒரு உற்பத்தியை மையமாக கொண்டுள்ளதை யோசிக்கவில்லையா? அதற்கு காரணம் உங்களை குறித்த நிறுவனத்தில் கணினிகளை உற்று நோக்கிக் கொண்டுள்ளன. ஒரு வியாபார நிறுவனம் தனது உற்பத்தியை கொள்வனவு அதிகமாக வாய்ப்புள்ள நுகர்வோர்களை பற்றி முகப்புத்தக நிறுவனமிடம் விசாரித்தால் இவர்களே அவர்கள் என உங்களை குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு முகப்புத்தகம் உங்களைப் பற்றி நன்கறிந்துள்ளது.

 

குறிப்பிட்டுச் சொன்னால் ஒரு வாரத்தில் உங்கள் தேவைகளும் சிந்தனைகளும் எந்நாளில் எந்நேரம் எவ்வாறு அலைமோதும் என்று திட்டவட்டமாக உங்களைப் பற்றி குறிப்பிடுமளவுக்கு முகப்புத்தகம் உங்களை தொடர்ந்துள்ளது. அவர்களின் கண்ணிலிருந்து நீங்கள் விடுபட சிறுகாலம் எடுக்குமென்றே சொல்ல வேண்டும். காரணம் இந்த நொடி வரை அவர்கள் உங்களை அறிவார்கள். அவர்களிடமிருந்து பல வியாபார நிறுவனங்களுக்கு உங்கள் விபரங்கள் ஏற்கனவே பகிரப்பட்டு இருக்கலாம். அந்த வியாபார நிறுவனங்கள் உங்களை பகிர்ந்துக் கொண்டும் இருக்கலாம்.

 

Trending என்ற வார்த்தையை நீங்கள் கேளவிப்பட்டிருக்கலாம். அதாவது குறிப்பிட்ட ஒரு காலஎல்லைக்குள் வெகுவாக பிரசித்தமான அல்லது பலரால் பேசப்பட்ட விடயம் அல்லது பழக்கம். சில காலங்களில் முகப்புத்தக பதிவுகளில் கூட இவ்வாறான பதிவுகளை கண்டிருக்கலாம். இதன் ஒரு கருப்பு பக்கமொன்றும் உள்ளது. Trending இன் பால் நீங்கள் நகர்கிறீர்கள் மட்டுமல்ல. உங்களை நகர்த்தவும் செய்கிறார்கள். காரணம் அதன்மூலம் உங்கிடம் பொருளை விற்க வியாபார நிறுவனங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.

ஆகவே, இனிமேல் உங்களைப் பற்றி ஏதேனும் தகவலொன்றை பகிரும் பட்சத்தில் சற்று சிந்தித்து செயற்படுங்கள்.

 

தொடரும்…

You may also like

Leave a comment