குழுப்பணி

Teamwork

 

உங்களின் தொழிலின் போது  நீங்கள் ஒரு குழுவில் அல்லது பல குழுக்களில் வேலை செய்கிறீர்களா? அப்படியானால், குழுச்செயல்பாடு உங்களுக்கு அவசியமான திறமையாகும். நீங்கள் அவர்களை நோக்கி ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொள்ளும்போது உங்கள் குழு சிறப்பாகச் செயல்படுவதை நீங்கள் காண்கிறீர்களா? அதனால்தான் ஒரு அலுவலகத்தில் குழுப்பணி முக்கியமானது.

 

குழுச்செயல்பாடு என்றால் என்ன?

 

ஒரு திட்டத்தைத் திறமையாகவும் திறம்பட முடிக்கப் பல்வேறு அமைப்புகளில் ஒரு குழுவுடன் குழுச்செயல்பாடு சிறப்பாகச் செயல்படுகிறது. இன்றைய உலகில் இது ஒரு முக்கியமான திறமை என்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் குழுச் செயல்பாட்டாளர்களை எ திர்பார்க்கின்றது .

குழுவின் செயல்பாடுகளை செய்வது மற்றும் குழுச் செயல்பாட்டாளராக இருப்பது எப்படி?

நீங்கள் மகிழிச்சியுடன் மற்றும் மரியாதை மூலம் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் அத்தோடு மற்றவர்களுக்கு வெவ்வேறு நோக்கங்கள் மற்றும் கருத்துக்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளாமல் நாம் சமூகத்தில் வாழ முடியாது,  ஒரு அலுவலகத்தில் நாங்கள் தொடர்ந்து மற்றவர்களுடன் பழகுகிறோம் எனவே அவர்களின் கருத்துகளையும் அனுபவங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறந்த புரிதலின் மூலம் குழுவுடன் இணைந்து பணியாற்றி நாம் முன்னேறலாம். குழு கூட்டங்களின் போது  விவாதிக்கப்படும் கருத்துக்களை பொறுத்துக் கொள்ளும் தன்மையுடன் நாம் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும், மேலும் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் எதிர்பார்க்கப்படும் மரியாதை ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது வேண்டும். வெறுக்கத் தக்க பேச்சு, கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் அவமரியாதை ஆகியவற்றை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

  

குழுப்பணியின் கூறுகள்;

 

  • தெளிவான நோக்கு; திட்டத்தின் குறிக்கோள்களைப் பூர்த்தி செய்தல் குழுவின் ஒரு நோக்காக இருக்க வேண்டும்.

 

  • தகவல் தொடர்பு: நல்ல தகவல் தொடர்பு இல்லாமல் ஒரு குழு செயல்பட முடியாது. எனவே சிறந்த தகவல் தொடர்பு குழு செயல்பாட்டில் முக்கியமானதாகும் (அது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்றால், அதை எவ்வாறு செய்ய முடியும்?)

 

  • ஒவ்வொரு நபரும் செய்ய வேண்டியதை வரையறுதல்: நன்கு வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களின் ஊடாக குழுவிற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்பதை ஒவ்வொரு கொடுக்கப்பட்ட பொறுப்புகளின் அடிப்படையில் அறிய உதவுகிறது.

 

  • பிரதிநிதித்துவம்: ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியிலும் இருக்க வேண்டியதில்லை, எல்லாவற்றையும் எல்லோரும் செய்ய வேண்டியதில்லை. எனவே, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளின் அடிப்படையில் செய்வதப்படுவது அவசியம்.

 

  • இலக்குகளை அமைத்தல்: நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் பொதுவான குறிக்கோள்களைக் கொண்டிருப்பது குறுகிய கால மற்றும் நீண்ட காலத்திற்கு குழுவிற்கு உதவும்.

 

  • வினைத்திறன் மிக்க உறவுகளை மேம்படுத்துதல்: குழு அதன் பணியில் திறமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டுமென்றால் குழுவுடனும் குழுவிற்காகவும் வினைத்திறன் மிக்க உறவுகளை கொண்டிருப்பது அவசியமாகும்.

 

  • குழுவின் சிந்தனையாற்றல்: அனைத்து நல்ல திட்டங்களும் ஒரு நல்ல குழுவின் சிந்தனையாற்றலிலிருந்து வெளிவருகின்றன. சிறந்த ஒன்று வெளிப்படும் வரை குழு அவர்களின் அனைத்து யோசனைகளையும் உள்வாங்கப்படுத்தல் வேண்டும்.

 

  • ஆதரவு: குழு என்ன செய்ய விரும்புகிறது என்பதைத் தீர்மானிக்கும்போது குழு அதனை ஆதரித்தால், அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்ய முடியும்.

 

  • ஊக்குவிப்பு; சிறந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டு பாராட்டப்பட வேண்டும் அத்துடன் ஒரு குழுத் தலைவரும் மற்ற அனைத்து குழு உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் ஊக்குவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

  • நம்பிக்கை: சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு குழுவின் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.

 

குழுப்பணியை சரியாகச் செய்யும்போது மிகவும் வேடிக்கையாக இருக்கும், மேலும் இது (அதில் உங்கள் பங்கு எதுவாக இருந்தாலும்), குழு வெற்றி பெறுகிறதா? அல்லது தோல்வியடைகிறதா? என்பதை தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம்.

You may also like

Leave a comment