அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.
- அ —–> எட்டு
- ஆ —–> பசு
- ஈ —–> கொடு, பறக்கும் பூச்சி
- உ —–> சிவன்
- ஊ —–> தசை, இறைச்சி
- ஏ —–> அம்பு
- ஐ —–> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
- ஓ —–> வினா, மதகு – நீர் தாங்கும் பலகை
- கா —–> சோலை, காத்தல்
- கூ —–> பூமி, கூவுதல்
- கை —–> கரம், உறுப்பு
- கோ —–> அரசன், தலைவன், இறைவன்
- சா —–> இறப்பு, மரணம், பேய், சாதல்
- சீ —–> இகழ்ச்சி, திருமகள்
- சே —–> எருது, அழிஞ்சில் மரம்
- சோ —–> மதில்
- தா —–> கொடு, கேட்பது
- தீ —–> நெருப்பு
- து —–> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
- தூ —–> வெண்மை, தூய்மை
- தே —–> நாயகன், தெய்வம்
- தை —–> மாதம்
- நா —–> நாக்கு
- நீ —–> நின்னை
- நே —–> அன்பு, நேயம்
- நை —–> வருந்து, நைதல்
- நொ —–> நொண்டி, துன்பம்
- நோ —–> நோவு, வருத்தம்
- நௌ —–> மரக்கலம்
- பா —–> பாட்டு, நிழல், அழகு
- பூ —–> மலர்
- பே —–> மேகம், நுரை, அழகு
- பை —–> பாம்புப் படம், பசுமை, உறை
- போ —–> செல்
- மா —–> மாமரம், பெரிய, விலங்கு
- மீ —–> ஆகாயம், மேலே, உயரம்
- மு —–> மூப்பு
- மூ —–> மூன்று
- மே —–> மேன்மை, மேல்
- மை —–> அஞ்சனம், கண்மை, இருள்
- மோ —–> முகர்தல், மோதல்
- யா —–> அகலம், மரம்
- வா —–> அழைத்தல்
- வீ —–> பறவை, பூ, அழகு
- வை —–> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
- வௌ —–> கௌவுதல், கொள்ளை அடித்தல்
அறிந்து மொழிந்து தமிழைக் காப்போம்.